News

பெற்ற மகனை கழுத்தை அறுத்துக் கொன்ற தாய்.

அமெரிக்காவில் தனது ஏழு வயது மகனை சமையல் செய்யும் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொன்ற Hanane Mouhib (36) என்னும் பெண் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Abraham Cardenas என்னும் தனது ஏழு வயது மகனை கழுத்தின் பின்புறத்தில் தாக்கியபின் அவனது கழுத்தை அறுத்துக் கொண்டிருந்த நிலையில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

விபரம் அறிந்து பொலிசார் வந்த போது, ஆக்ரோஷமாக நின்றுகொண்டிருந்த Hanane Mouhib-யை பெப்பர் ஸ்பிரே மற்றும் stun gun ஆகியவற்றைப் பயன்படுத்தியே கட்டுக்குள் கொண்டுவந்ததாக தெரிகிறது.

Hanane Mouhib மனநல மருத்துவமனை ஒன்றில் நர்ஸாகப் பணிபுரிந்தவள் என்பதும் அவளுக்கும் சற்று மன நலப் பிரச்சினைகள் இருந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் மனநலப் பிரச்சினைகளுக்காக மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அவள் 10 நாட்களுக்குமுன் தான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.

எனினும் தனது பெற்ற மகனை கத்தியால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது ஏன் என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட Hanane Mouhib ஜாமீன் வழங்கப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top