போர் மூளும் அபாயம்: உணவு பண்டங்களை சேமிக்க மக்களை வலியுறுத்தும் ரஷ்ய ஊடகங்கள் .

சிரியா விவகாரம் உலகப் போராக வெடிக்கும் அபாயம் இருப்பதால் போதிய உணவுகளை சேமித்து வைக்க மக்களை ரஷ்ய ஊடகங்கள் வலியுறுத்தி வருகின்றன. ரஷ்யாவின் பிரபல செய்தி ஊடகங்களில் ஒன்றான Rossiya-24 என்ற செய்தி ஊடகமே குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
அதில் பாஸ்தா உணவுகளை தவிர்க்க வேண்டும் எனவும், இனிப்பு வகைகளை பதுங்கு குழிகளில் எடுத்துச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. அதிக தண்ணீரை சேமிக்க வலியுறுத்தும் குறித்த ஊடகம், இனிப்பு வகைகளை பதப்படுத்தி குறைவாக சேமிக்க வலியுறுத்தியுள்ளது.
அரிசி உணவுகள் உரிய முறைப்படி சேமித்தால் 8 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம் எனவும், ரஷ்யாவின் பாரம்பரிய உணவான கோதுமை ஓராண்டு மட்டுமே பயன்படுத்த முடியும் எனவும் பட்டியல் இட்டுள்ளது. இனிப்பு வகைகளை அதிகமாக எடுத்துக் கொண்டால் தண்ணீர் தாகம் எடுக்கும், அதனால் பதுங்கு குழிகளில் இனிப்பு தவிருங்கள் என மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
உணவு இன்றி 3 கிழமைகள் வரை உயிர் வாழலாம், ஆனால் தண்ணீர் இன்றி 3 நாட்களுக்கு மேல் தாக்குப்பிடிக்கவே முடியாது என கூறும் அந்த செய்தி ஊடகம், தண்ணீரை இப்போதே சேமிக்க வலியுறுத்தியுள்ளது. மட்டுமின்றி போதிய மருந்து மாத்திரைகளையும் சேமிக்கவும் வலியுறுத்தியுள்ளது.