News

மனநலம் பாதித்த மகனை 20 ஆண்டுகளாக மரப்பெட்டியில் பூட்டி வைத்திருந்த தந்தை

ஜப்பானில் மனநலம் பாதித்த மகனை 20 ஆண்டுகளுக்கும் மேலாக மரப்பெட்டியில் தந்தை பூட்டி வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானின் மேற்கு பகுதியில் சாண்டா நகரில் வசிக்கும் யமசாகி என்பவர் மனநிலை பாதிக்கப்பட்ட தனது மகனை 20 ஆண்டுகளுக்கும் மேலாக மரப்பெட்டியில் அடைத்து வைத்ததாக கைதாகியுள்ளார். 1 மீட்டர் உயரப்பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அவரது மகனுக்கு தற்போது 42 வயதாகிறது.

மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதால் சில நேரங்களில் மோசமான வன்முறை செயல்பாடுகளை செய்துவிடுவதால் அவரை அடைத்து வைத்ததாக கைதான யமசாகி தெரிவித்துள்ளார். உணவு, நீர் மட்டும் மரப்பெட்டியை திறந்து அவர் தனது மகனுக்கு வழங்கியுள்ளார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக மரப்பெட்டியில் அடைக்கப்பட்டிருந்ததன் காரணமாக தற்போது முதுகு வளைந்த நிலையில் அவர் மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top