News

மீட்புப்பணியில் நடந்த துயரம்: ஹெலிகொப்டர் விசிறியில் சிக்கி பலியான பரிதாபம் .

கொலம்பியாவில் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரை மீட்க வந்த ஹெலிகொப்டர் ஒன்று திடீரென்று கவிழ்ந்து கீழே விழுந்ததில் ஒருவர் ஹெலிகொப்டரின் விசிறியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெலிகொப்டர் ஒன்று தென்மேற்கு Cauca பகுதியில் விபத்துக்குள்ளானது.

அதில் விலை உயர்ந்த கருவிகள் இருந்ததால் அதை மீட்பதற்காக இன்னொரு ஹெலிகொப்டர் அனுப்பப்பட்டது, நான்குமுறை அதை மீட்க முயன்றும் முயற்சி வெற்றிபெறவில்லை. ஐந்தாவதுமுறை முயற்சி செய்யும்போதுதான் இந்த எதிர்பாராத அசம்பாவிதம் நடைபெற்றது. இது தொடர்பான வீடியோவில் இரண்டு பணியாளர்கள் கீழே விழுந்து கிடக்கும் ஹெலிகொப்டரின் அருகே நின்று வரும் ஹெலிகொப்டரை கையசைத்து எங்கே இறங்கவேண்டும் என காட்டுகிறார்கள்.

வெள்ளை உடை அணிந்த நபர் ஹெலிகாப்டருக்கு சமிக்ஞை செய்வதை வீடியோவில் காணலாம். அப்போது எதிர்பாராத விதமாக அந்த ஹெலிகொப்டர் சரிந்து கிழே
விழ சுழலும் அதன் இறக்கைகள் அந்த மனிதரை பதம் பார்க்கின்றன, அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஹெலிகொப்டரை ஓட்டி வந்த பைலட்டுக்கு பெரிய அளவில் காயங்கள் எதுவும் இல்லை, பொலிசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top