மைத்திரி- ரணில் இடையே புரிந்துணர்வு உடன்பாடு,

சிறிலங்கா அரசாங்கத்தின் எதிர்காலப் பயணம் தொடர்பாக, அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்படவுள்ளது.
கண்டியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இந்த தகவலை நேற்று வெளியிட்டார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அமைச்சர் கிரியெல்ல, நல்லாட்சி அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகளை தீர்மானிக்கும் வகையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளது.
“இந்தப் புரிந்துணர்வு உடன்பாடு தற்போது வரையப்பட்டு வருகிறது. புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்ட பின்னரே, புதிய அமைச்சரவை பதவியேற்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.