News

ரணிலின் பதவிக்கு மீண்டும் ஆபத்து? கூட்டு எதிர்க் கட்சி அடுத்த கட்ட நகர்வு .

புத்தாண்டு விடுமுறையை தொடர்ந்து நடைபெறவுள்ள முதலாவது நாடாளுமன்ற அமர்வுடன், பிரதமரை நீக்குவதற்கு கூட்டு எதிர்கட்சி மீண்டும் திட்டம் தீட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புத்தாண்டு விடுமுறையின் பின்னரான முதலாவது நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது, முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் எதிர்கால வேலைத்திட்டத்தை தோற்கடிப்பதற்கு கூட்டு எதிர்கட்சி திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்மூலம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை அடிப்படையில் பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளதாக கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அரசாங்கத்தின் எதிர்கால வேலைத்திட்ட முன்மொழிவை பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றியடையச் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் சகோதர ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top