ரணிலுக்கு எதிரான பேரணியில் இருந்து ஆயுதங்கள் மீட்பு .

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து கண்டியில் இருந்து கொழும்பு வரை பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த பேரணியில் பயணித்த ஜீப் வண்டியிலிருந்து துப்பாக்கிகள் இரண்டு மற்றும் கருவாக் கம்புகள் 98 என்பன இன்று மீட்கப்பட்டுள்ளன.
கடுகன்னாவை மற்றும் பேராதெனிய பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது இவைகள் மீட்கப்பட்டுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் என கோரி ஐக்கிய தேசியக் கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி என்பன இணைந்து இந்த பேரணியை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.