ரெஜினோல்ட் குரேயே ஆளுநராக நீடிப்பார்?

வடக்கு மாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே தொடர்ந்தும் நீடிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மாகாணங்களின் ஆளுநர்களுக்கு விருப்ப அடிப்படையில் இடமாற்றங்களை வழங்க அரசு திட்டமிட்டிருந்தது. இதையடுத்து அனைத்து மாகாண ஆளுநர்களுடனும் கடந்த மாதம் ஜனாதிபதி பேச்சு நடத்தியிருந்தார். இந்த பேச்சுவார்த்தையில், தமிழர் ஒருவரை வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேல்மாகாண ஆளுநரான கே.சி.லோகேஸ்வரனே வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட இருந்தார். எனினும் 9 மாகாணங்களின் ஆளுநர்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் சந்தித்தார்.இதில், வடக்கு மாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரேயே நீடிப்பார் என ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.