ரொரண்டோவில் இளைஞர் சுட்டுக்கொலை: நடந்தது என்ன?

கனடாவின் ரொரண்டோவில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வெள்ளிக்கிழமை மாலை இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் சுடப்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த இளைஞர் குறித்த தகவலை பொலிசார் டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.
அதில், துப்பாக்கி சூட்டில் இறந்தவரின் பெயர் ப்ரெயின் தாமஸ் (32) என கூறப்பட்டுள்ளது. இதில் தொடர்புடையவர்கள் வெள்ளை நிற வாகனத்தில் தப்பிச்சென்றதாகவும், இதுகுறித்து தகவல் தெரிந்தால் தங்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரொரண்டோவின் கொலை குற்றப்பிரிவு பொலிசார் இவ்வழக்கை விசாரிக்கவுள்ளனர்.