News

வங்காளதேசத்தில் மின்னல் தாக்கி 14 பேர் பலி

வங்காளதேச நாட்டில் மின்னல் தாக்கியதில் பெண்கள், ஆண்கள் உள்பட 14 பேர் பரிதாபமாக பலியாகினர்.

வங்காளதேச நாட்டில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், வங்காளதேசத்தில் நேற்று மின்னல் தாக்கியதில் பெண்கள், கல்லூரி மாணவிகள் உள்பட 14 பேர் பலியாகினர்.

இதுதொடர்பாக மீட்பு படையினர் கூறுகையில், சிராஜ்கஞ்ச், சுனம்கஞ்ச், மகுரா, நோகாலி மற்றும் ரங்கமதி மாவட்டங்களில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மீது மின்னல் தாக்கியது. இதில் 14 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். இதில் கல்லூரி மாணவிகள், பெண்கள் உள்பட பலரும் அடங்குவர்.

பலத்த மழையை தொடர்ந்து ஜமுனா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பத்திரமான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் விரைந்து செய்து முடிக்கும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top