வடக்கின் ஆளுநராக மீண்டும் பொறுப்பேற்றார் றெஜினோல்ட் கூரே!

வடக்கு மாகாண ஆளுநராக மீண்டும் நியமிக்கப்பட்ட றெஜினோல்ட் கூரே இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். மாகாண ஆளுநர் மாற்றத்தின் போது, மீளவும் வடக்கு ஆளுநராக றெஜினோல்ட் கூரே நியமிக்கப்பட வேண்டுமென பல தரப்பினர்களும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கமைய வடக்கு ஆளுநராக றெஜினோல்ட் கூரேயை ஐனாதிபதி மீளவும் நியமித்திருந்தார்.
இந்நிலையில், இன்று யாழ்ப்பாணம் வந்த ஆளுனர் கூரேக்கு பலாலியில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், யாழ். மாவட்டச் செயலகம் முன்பாக அமைந்துள்ள மாகாண ஆளுநர் அலுவலகத்தில், மாலைகள் அணிவித்தும் பொன்னாடைகள் போர்த்தியும் வரவேற்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மீளவும் வடக்கு மாகாண ஆளுநருக்கான தன்னுடைய கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
இதன் போது, “வடக்கிலுள்ள பலரதும் வேண்டுகோளுக்கமையவே தான் மீளவும் இங்கு வந்துள்ளதாகவும், தான் இங்கு செய்ய வேண்டிய கடமைகள் நிறையவே இருப்பதாகவும் அவற்றைச் நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் தான் முன்னெடுக்க உள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.