News

வடக்கில் இருந்து மீட்கப்படும் பெருந்தொகையான தங்கம் விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானதா?

வட பகுதியில் இருந்து பெருமளவான தங்கம் மீட்கப்பட்டு வரும் நிலையில், அவை விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் சுனில் ஜயரத்ன இவ்வாறு சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

வட பகுதி கடற்பரப்பில் அண்மை காலமாக தங்கம் கடத்தல் அதிகரித்து வருகின்றது. இதனால் கடற்படையினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மன்னார் கடற்பரப்பில் இருந்து 24.2 கிலோ தங்கம் படகு ஒன்றின் மூலம் கடத்திச் செல்லப்பட்ட நிலையில், அவை மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்னர். மீட்கப்பட்ட தங்கம் 150 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் சுனில் ஜயரத்ன கருத்து தெரிவிக்கையில், “கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான தங்கம், போரின் இறுதியில் விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டதில் ஒரு பகுதியாக இருக்கலாம்” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில், மலிவாக கிடைக்கும் தங்கத்தை, இந்தியாவுக்கு கடத்திச் செல்வதற்கு முயற்சிப்பது வழக்கமானது என கடற்படை பேச்சாளர் கொமாண்டர் லங்காநாத திசநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், தங்கம் கடத்தலில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் மன்னாரைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top