வட கொரிய நடவடிக்கைகளை கண்காணிக்க அதிரடியாக களமிறங்கியது கனடா .

வட கொரிய கடற்படை நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில், கனடாவின் ராயல் கனடியன் விமானப்படையின் ரோந்து விமானம் சனிக்கிழமை ஜப்பானில் தரையிறங்கியுள்ளது CP-140 அரோரா எனும் கனடிய விமானப்படை தனது 40 வீரர்களுடன் ஜப்பானில் தரையிறங்கியுள்ளது. வடகொரியாவின் கடத்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் எதிர்க்கவும் இந்தப் படை செயல்படப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் வெளியுறவு மந்திரி கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் மற்றும் பாதுகாப்பு மந்திரி ஹர்ஜிட் சஜ்ஜன் ஆகிய இருவரும் கூறுகையில் அணு ஆயுதத் திட்டத்தை கைவிடும்படி வட கொரியாவிற்கு அழுத்தம் கொடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை ஆதரிக்க கனடா உறுதிபூண்டிருப்பதாக ஒரு அறிக்கையில் தெரிவித்தனர் . அதனை தொடர்ந்து வடகொரியாவின் கடத்தல் விவகாரங்கள் குறிப்பாக கப்பலுக்கு கப்பல் இடமாற்றங்கள் செய்வதை தடுக்கும் முயற்சியாக கனடா அரசு இந்த ரோந்துப் படையை பயன்படுத்த போகிறது.
இந்த முயற்சியில் கனேடிய ஆயுதப் படைகள் (CAF) மற்றும் கடற்படை ரோந்து கப்பல்கள் இணைந்து செயல்படப் போகின்றன. மேலும் அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் பொருளுதவியுடன் இந்த முயற்சியை கனடா தொடங்குவதாக தெரிவித்துள்ளனர். குறிப்பிடப்பட்ட கப்பலுக்கு கப்பல் இடமாற்றம் என்பது சர்வதேச தடைகளை மீறி சரக்குகளை மாற்றும் ஒரு நிகழ்வாகும். கடந்த பிப்ரவரியில் ஜப்பான் வடகொரியாவின் இந்த சர்வதேச தடை மீறல் குறித்து மூன்று தனித்தனி காட்சிகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
வாட்டர்லூவின் சர்வதேச ஆளுமைத்திறன் கண்டுபிடிப்பு மையத்தில் ஆராய்ச்சியாளர் சைமன் பலாமாரின் கருத்துப்படி இந்தக் கப்பலுக்கு கப்பல் இடமாற்றத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயுக்கள் வடகொரியாவுக்கு இறக்குமதி செய்யப்படலாம் எனக் கருதப்படுகிறது. இதனை தடை செய்வதன் மூலம் வடகொரிய நாட்டின் வருடாந்திர கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும் என்றும் ஆகவே அதன் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத்தடை சரியான முறையில் செயல்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்தக் கனடிய விமான ரோந்துப் படை தென்கொரிய ஒகினாவில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் கெடனா விமான தளத்தை அடிப்படையாக கொண்டது என ஜப்பானிய அரசாங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது பற்றி கனடாவின் தேசிய பாதுகாப்பு துறை கூறுகையில் இந்த விமானம் ஜப்பானின் தேவைகள் முடியும்வரை நீண்ட காலத்திற்கு அங்கேயே இருக்கும் என்று கூறியிருக்கிறது.தென்கொரியாவின் பொறுமை மற்றும் அணு ஆயுதம் வைத்துள்ள அதன் அண்டை நாடோடான பேச்சுவார்த்தை விளையாட்டுகள் முடிவுக்கு வரும் வரையில் இதன் தேவை நீடித்திருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது