விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரிய ஒன்ராரியோ நாடாளுமன்றம் ! (Photos )

நேற்றைய நாள் கனடா நாட்டில் ஒன்ராரியோ நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட ‘விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரும் தீமானத்தை’ முன்வைத்த ஒன்ராரியோ நாடாளுமன்ற உறுப்பினர் மாண்பு மிகு ஜக் மக்கிளரன் அவர்கள் ஒன்றாரியோ பாராளுமன்றத்தில் தீர்மானத்தை முன்வைத்த பின் தமிழ் உணர்வாளர்களை சந்தித்து அவர்களோடு உணவருந்தி தமிழ் மக்கள் துயர் கேட்டு அதன் பின் பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்று மாலை ஊடகவியலாளர்கள் சந்திப்பிலும் பங்கேற்று தனது தீர்மானம் பற்றியும் தனது கொள்கைகள் பற்றியும் தமிழ் மக்களுக்கான குரல் கொடுப்பு பற்றியும் பேசிய பொழுது எடுத்த புகைப்படங்கள்.
இந்நிகழ்வின் அவர் தமிழகத்தில் காவிரி நதி நீர் சிக்கல் பற்றியும் தமிழக மக்களுக்கும் தனது குரல் இருக்கும் என்ற கருத்தையும் பதிவு செய்தார்.
“ஆயிரம் படிகள் கடந்து இலக்கினை தொட வேண்டியிருந்தாலும் அதன் முதற்படியில் கால் வைப்பதே முதன்மை சவால்.” என்று கூறிய தமிழ் மக்களின் தோழர் ஜாக் மக்லாறேன் ” விடுதலை புலிகள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளே. அவர்களை முடக்கி தமிழ் மக்களை இரண்டாம் நிலை பிரசைகளாக இழிவு படுத்துவதை கனடா தவிர்க்க வேண்டும்” என கூறி முதல் அடியை காத்திரமாக வைத்துள்ளார்.
தேவதைகள் மண்ணில் உலவுவதுண்டு. அதில் ஆண் என்றும் பெண் என்றும் பேதங்கள் இருப்பதில்லை.
அப்படி ஒரு தேவதையாக அவர் தோற்றமளித்தார் நேற்றைய நாளில்.
ஆறாத காயங்களோடு வாழும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த அவருக்கு எங்கள் பாராட்டுகளையும் அவரின் வெற்றிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்வோம்!
“தமிழ் மக்கள் எங்கு வாழ்ந்தாலும் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இனத்துக்காக குரல் கொடுப்பவர்களோடு தோழமையோடு பயணிப்பார்கள். அந்த வகையில் தமிழ் மக்களின் மனதில் இன்றைய செயலால் உங்களுக்கான தனி இடத்தை பெற்று விட்டீர்கள்” என்ற செய்தியையும் அவரிடம் நேற்று நான் சொல்லியிருந்தேன்.