Canada

வினிபெக்கில் காணாமல் போன சிறுமியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

வினிபெக் பகுதியில் காணாமல் போயுள்ள 10 வயது சிறுமியை கண்டுபிடிக்க பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். மேரி ஹார்டி, என்ற குறித்த சிறுமி இறுதியாக டவுண் டவுனில் தென்பட்டதாகவும், இதன்பின்னர் அவர் காணாமல் போனதாவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் கடைசியாக சாம்பல் நிற விண்டர் ஜெக்கட்டும், இளம் சிவப்பு நிற டைட்ஸ் மற்றும், கறுப்பு நிற சப்பாத்தும் அணிந்திருந்ததாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சிறுமி 5 அடி உயரமானவர் எனவும், மெல்லிய தோற்றம் கொண்டவர் எனவும் சிகப்பு-பிறவுன் நிற தலைமுடி கொண்டவர் எனவும் பொலிஸார் விபரித்துள்ளனர்.

குறித்த சிறுமி குறித்து தகவல் அறிந்தவர்கள் தம்மை உடனடியாக தொடர்புக் கொள்ளுமாரும், பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top