News

வேற்றுமைகளைக் களைந்தாலே அடக்குமுறையிலிருந்து மீளலாம்: அருட்தந்தை இம்மானுவேல் அடிகள்.

“எங்கள் அரசியல்வாதிகள், தலைவர்களுக்கு சிறப்புப் பொறுப்பும், கடமையும் உண்டு. ஒருவரையொருவர் தட்டி வீழ்த்து பவர்களாக இருக்காது ஒரே இலட்சியத்துடன், ஒரே நோக்கத்துடன் விளையாடும் கால்பந்தாட்ட வீரர்கள் போன்று ஒரே இலட்சியத்துக்காக ஒத்துழைக்கவேண்டும்.” என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே.இம்மானுவேல் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:- “நாங்கள் எமது சகல திறமைகளையும் உபயோகித்து எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தினால் போதாது. எமது சமூகத்துக்குள்ளே எமக்குள்ளே ஆழமாக வேரூன்றியிருக்கும் வேற்றுமைகள் அடக்குமுறைகளிலிருந்து விடுதலைபெற முடியும். இலட்சியத்துக்காக ஒத்துழையுங்கள் என்பதே எனது பணிவான வேண்டுகோள். இந்த அணுகுமுறையையே புலம்பெயர் அமைப்புகள் மத்தியிலும் நான் ஊக்குவித்துக் கடைப்பிடித்து வருகின்றேன்.

ஆனால், சகலதையும் அரசியல்வாதிகளின் கரங்களில் ஒப்படைப்பது புத்திசாலித்தனமல்ல. சமூகத்திலிருக்கும் சகலவிதத் தலைவர்களும் தங்கள் பங்கை உரிய முறையில் செய்ய கடமைப்பட்டிருக்கிறார்கள். எம் மத்தியிலிருக்கும் சமூகத் தலைவர்களும், புத்திஜீவிகளும், உத்தியோகத்தர்களும், மதத் தலைவர்களும் பார்வையாளராகவோ மௌனமாகவோ இருப்பது தவறானது. இது எம் இனத்துக்குத் துரோகம் இழைப்பதாகும். நாங்கள் மௌனமாயிருப்பதால்தான் சில அரசியல்வாதிகள் மக்கள் நலனைக் கைவிட்டு சுயநலத்துடன் நடக்கின்றனர்.

இக்கட்டான இந்நிலையில் தமிழ் மக்களை வழிநடத்த ஊடகங்களுக்கு ஒரு பெரும் பொறுப்புண்டு. நானும் 3 வருடங்களாக ஊடகவியலாளராகப் பணிபுரிந்தவன் என்ற ரீதியில் ஊடகங்களின் சவால்களையும் உயர் இலட்சியங்களைக் கடைப்பிடிப்பதிலுள்ள பிரச்சினைகளையும் சற்று அறிவேன். இருந்தும் ஊடக உரிமையாளர்களும், பிரதான ஆசிரியர்களும் தமிழ் மக்களின் போராட்ட இலட்சியத்தைப் புனிதமாக மதித்து நடக்கவேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன். >எமது விடுதலைப் போராட்ட வடிவங்கள், அணுகுமுறைகள் மாறலாம். ஆனால், மக்களின் ஊக்கமும் பங்களிப்பும் மிக முக்கியமானது” – என்றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top