28 வருடங்களின் பின் தமது காணிகளை கண்ணீர்மல்க பார்வையிட்ட மக்கள்..

28 வருடங்களின் பின் மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு மக்கள் தமது காணிகளை ஆவலுடன் கண்ணீர்மல்க பார்வையிட்டுள்ளனர்.
28 வருடங்களுக்கு முன் இராணுவ ஆக்கிரமிப்பினா ல் வலிகாமம் வடக்கு பகுதி இராணுவ கட்டுப்பாட்டிற்குள் சென்றது. பின்னர் இந்த பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டதை தொடர்ந்து 28 வருடங்களாக வலிகாமம் வடக்கு மக்கள் இடம்பெர்ந்து 40 இற்கும் மேற்பட்ட நலன்புரி முகாம்களிலும் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்து 683 ஏக்கர் இன்று விடுவிக்கப்பட்டதையடுத்து, நீண்டகாலத்தின் பின் காடுகளாக மாறி கிடக்கும் தங்கள் சொந்த நிலத்தை வலி வடக்கு மக்கள் ஆவலுடன் கண்ணீர் மல்க பார்வையிட்டுள்ளனர்.