India

3 வயது சிறுமி பலாத்காரம் கோயில் பூசாரி அதிரடி கைது: தூக்கு தண்டனை சட்டத்தில் சிக்குவாரா?

சென்னை: மூன்று வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் கோயில் பூசாரியை போலீசார் கைது செய்தனர். போக்சோ சட்டப்பிரிவின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை சூளைமேட்டில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோயிலுக்கு நேற்று முன்தினம் இரவு மூன்றரை வயது சிறுமி ஒருவர் தனது பாட்டியுடன் வந்தார். கோயில் வளாகத்தில் சிறுமி அங்கும் இங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தார். உடன் வந்த அவரது பாட்டி, சிறுமி விளையாடுவதால் சிறிது நேரம் கோயில் வளாகத்தில் அமர்ந்து கொண்டிருந்தார். சிறுமி தனியாக விளையாடிக் கொண்டிருந்ததை கோயில் பூசாரி உதயகுமார் (40) பார்த்தார். அப்போது கோயில் வளாகத்தில் சிறுமியின் பாட்டியை தவிர யாரும் இல்லை. இதையடுத்து உதயகுமார் சிறுமியிடம் விளையாடுவது போல் நடித்து கோயில் வளாகத்தின் பின்புறம் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் பயந்து போன அந்த சிறுமி அழுதுள்ளார். உடனே பூசாரி உதயகுமார் சிறுமி வழுக்கி விழுந்துவிட்டார் என்று அந்த பாட்டியிடம் கூறியுள்ளார். பிறகு சிறுமியை அழைத்துக்கொண்டு அந்த பாட்டி வீட்டிற்கு வந்துவிட்டார்.

ஆனால் சிறுமி வலி தாங்க முடியாமல் தொடர்ந்து அழுதுள்ளார். இதனால் சிறுமியின் தாய் சந்தேகப்பட்டு சிறுமியிடம் கேட்டுள்ளார். சிறுமிக்கு மூன்றரை வயது மட்டுமே ஆவதால் எதையும் சரியாக சொல்ல தெரியவில்லை. வயிற்றில் கை வைத்தப்படி வலிக்கிறது என்று கூறியபடியே அழுது கொண்டே இருந்தார். பிறகு சிறுமியின் ஆடையை கழற்றி பார்த்தபோது உடலில் பல இடங்களில் வீக்கங்கள் இருந்ததை பார்த்த தாய் அதிர்ச்சியடைந்தார். உடனே சிறுமியின் பாட்டியிடம் கோயிலில் நடந்த விவரத்தை கேட்டார். அதற்கு அவர், சிறுமி பூசாரி உதயகுமாரிடம்தான் விளையாடிக் கொண்டிருந்ததை கூறினார். உடனே சிறுமியின் பெற்றோர் கோயிலுக்கு சென்று பூசாரி உதயகுமாரை பிடித்து விசாரித்தனர். அப்போது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு ெகாடுத்ததை ஒப்புக்கொண்டார். சிறுமியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோயில் பூசாரி உதயகுமாரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து காவல்நிலையத்திற்கு பூசாரி உதயகுமாரை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். சூளைமேடு பெரியார் பாதை பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர். கோயில் வளாகத்தில் சிறுமி தனியாக விளையாடியதால் திடீரென உணர்ச்சிவசப்பட்டேன். என்ன செய்கிறேன் என்றே தெரியாமல் தவறு செய்துவிட்டேன். என்ைன மன்னித்துவிடுங்கள் என்று பூசாரி உதயகுமார் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். அதைதொடர்ந்து கோயில் பூசாரி உதயகுமாரை குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தடுப்பு சட்டத்தின் (போக்சோ)) கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

முதல் வழக்கா?
இந்தியாவை உலுக்கிய சிறுமிகளின் பாலியல் பலாத்கார சம்பங்களுக்கு பிறகு பிரதமர் தலைமையில் நடந்த அவசர கூட்டத்தில் சிறுமிகளை பாலியல் பலத்காரம் ெசய்தால் தூக்கு தண்டனை விதிப்பது உள்பட பல்வேறு புதிய திருத்தங்களை ெகாண்ட அவசர சட்டம் கொண்டு வந்தனர். அதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்தார். இந்த சட்டப் பிரிவுக்குள் பூசாரியின் வழக்கு வரலாம் என தெரிகிறது.

சிறுமியிடம் அத்துமீறல் : வழக்கறிஞர் கைது
சென்னை புரசைவாக்கம் சோலையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அபிலாஷ் (39). இவர் தனது, குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என்று 10 பேருடன் கோவா சென்றார். இவர்களுடன் 9 வயது சிறுமியும் இருந்தார். இவர்கள் வர்தாவில் இருந்து திருவனந்தபுரம் சென்று பின்னர் சென்னைக்கு திருவனந்தபுரம்-சென்னை ரயிலில் முன்பதிவு பெட்டியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.15 மணிக்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, அதே முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த நபர் ஒருவர், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து உடனடியாக டிக்கெட் பரிசோதகர், ஈரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், ஈரோடு ரயில்நிலைய போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபர் சென்னை பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கார்டனை சேர்ந்த வழக்கறிஞர் பிரேம்ஆனந்த் (57) என தெரியவந்தது. இதையடுத்து அபிலாஷ் அளித்த புகாரின்பேரில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012ன்கீழ் (போக்சோ) வழக்குப்பதிவு செய்து பிரேம்ஆனந்தை கைது செய்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top