Canada

33-வயது பெண்ணின் உயிரை பறித்த ஐந்து வாகன மோதல்!

ரொறொன்ரோ-ஞாயிற்றுகிழமை இரவு இடம் பெற்ற வாகனங்களின் மோதலில் 33-வயதுடைய பெண் கொல்லப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மாலை ஆறு மணிக்கு சிறிது பின்னராக ஸ்ரோவில் மற்றும் பிரிட்;ஜ்வாட்டர் பகுதி றிச்மன்ட்ஹில்லில் பல-வாகனங்கள் மோதியுள்ளன.

பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட காயமடைந்த மற்றவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மரணமடைந்தவர் மோதலில் சம்பந்தப்பட்ட லம்பொகினி வாகனத்தில் இருந்த பயணி என பொலிசார்; திங்கள்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர்.

விபத்திற்கு தெருப்பந்தயம் காரணமாக இருக்கலாம் என கருதப்படுகின்றது. யோர்க் பிராந்திய பொலிஸ் அதிகாரிகள் புலன்விசாரனையில் ஈடுபட்டுள்ளதுடன் சம்பவத்தை கண்டவர்களின் சாட்சியங்களையும்எதிர்பார்க்கின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top