காணாமல் போன மகன்…. கைவிட்ட பொலிஸ்: நெகிழ்ச்சியை ஏற்படுத்திய தந்தையின் நம்பிக்கை.

மூன்று வாரங்களுக்கு முன் காணாமல் போன தனது 10 வயது மகனை நீரில் தேடும் முயற்சியை பொலிசார் திங்களன்று கைவிட்டது தனக்கு நம்பிக்கை அளித்திருப்பதாக அச்சிறுவனின் தந்தை Frederic Kouakou கூறியுள்ளார்.
காணாமல்போன தன் மகன் ஆர்யெல் ஜெப்ரி ஆற்றில் விழுந்திருக்கலாம் எனும் பொலிசின் கூற்றை Frederic Kouakou நம்ப மறுத்திருக்கிறார். மொண்ட்ரியல் பொலிஸ் ஆற்றுத் தேடலைக் கைவிட்டது எனக்கு மிகுந்த நம்பிக்கையளிக்கிறது , எனவே எங்களது சக்தியை கடத்தல் கோட்பாடு குறித்த ஒரே திசையில் கவனம் செலுத்துவோம் என்கிறார்.
தனது மகன் கடத்தப்பட்டிருக்கலாம் என்று அவர் ஆரம்பத்தில் இருந்தே கூறி வந்திருக்கிறார் ஆனாலும் சிறுவன் ஆற்றில் தவறி விழுந்திருக்க வாய்ப்பிருப்பதாக மொண்ட்ரியல் பொலிசார் அனுமானித்தனர். அதைத் தொடர்ந்து மொண்ட்ரியலின் வடக்கு கரையோரத்தில் உள்ள உறைந்த ஆற்றில் கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமையன்று முழுவதுமாய் தேடுதல் வேட்டை நடைபெற்றது . ஆற்றின் நீரோட்டத்தோடு கூடிய உறைந்த பனிக்கட்டியின் தன்மை நீருக்குள் தேடும் பணியைப் பெரும் ஆபத்துக்குள்ளாக்கியிருக்கிறது.
இதற்காக நிறைய முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றது நிறைய ஆற்றல்கள் செலவாகியுள்ளன என்றாலும் எங்களது தேடுதல் முயற்சி துரதிர்ஷ்டவசமாக தோல்வியில் முடிந்து விட்டது என்று கூறும் பொலிஸ் அதிகாரி Lafreniere, பூங்காவில் காணாமல் போவதற்கு ஒரு மணி நேரம் முன்பு இருந்த cctv காட்சிகள் மற்றும் அங்கு சிறுவனுடன் பேசிய ஒருவரின் நம்பகமான சாட்சியை வைத்து சிறுவன் ஆற்றில் தற்செயலாக விழுந்திருக்கலாம் என்று நம்புகின்றார்.
இந்த கோட்பாட்டை நம்ப மறுக்கும் பிரடெரிக் கூவாகு, இன்னமும் தன் மகன் உயிரோடு இருப்பதாகவே நம்புகிறார். நாம் சாதாரண மனிதர்கள். சதையால் ஆனவர்கள் என்றாலும் ஆன்மா என்னும் தெய்வமும் நம்முள் குடியிருக்கிறது. நமக்கும் மேற்பட்ட சக்தி ஒன்று உள்ளது , அது என் மகனை எனக்கு உயிருடன் திருப்பித் தரும் என்று அவர் கூறியது அனைவர் மனதையும் நெகிழச் செய்கின்றது.