News

75 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கி காணாமல் போன பிரித்தானிய கப்பல், திருகோணமயில் கண்டெடுக்கப்பட்ட


இரண்டாம் உலகப் போரின் போது 75 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கி காணாமல் போன நிலையில் இலங்கை கடற்பரப்பில்
கண்டெடுக்கப்பட்ட பிரித்தானிய பயணிகள் கப்பல், பெரும் போராட்டத்தின் பின்னர் கடலின் மேற்பரப்பிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

1942ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜப்பானின் விமானத் தாக்குதலுக்கு இலக்காகி குறித்த சரக்கு மற்றும் பயணிகள் கப்பல் மூழ்கி காணாமல் போனது. குறித்த கப்பலானது திருகோணமலை துறைமுகப் பகுதியில் சுமார் 35 அடி ஆழத்தில் மூழ்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து பல மாத போராத்தின் பயனாக இலங்கை கடற்படையைச் சேர்ந்த சுழியோடிகளின் உதவியுடன் தற்போது குறித்த கப்பல் கிழக்கு கடற்பகுதியின் மேற்பரப்பிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 452 அடி நீளமான குறித்த கப்பலை கடலின் மேற்பரப்பிற்கு கொண்டுவரும் பணிகள் கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கடற்படையைச் சேர்ந்த சுழியோடிகளின் உதவியுடன் திருகோணமலை துறைமுகப் பகுதியில் சுமார் 35 அடி ஆழத்திலிருந்து இக்கப்பல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top