News

அமெரிக்காவில் எச்4 விசாவுக்கு மூடுவிழா: இந்தியர்களுக்கு பாதிப்பு?

வாஷிங்டன்: அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை இன்றி, இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டினர் ‘எச்-1’ பி விசா பெற்று வேலை செய்கிறார்கள். அவர்களது வாழ்க்கை துணைவர்களுக்கு ‘எச்-4’ விசா வழங்கி, அங்கு வேலை செய்ய அனுமதி வழங்கும் திட்டத்தை ஒபாமா, ஜனாதிபதியாக இருந்தபோது கொண்டு வந்தார். ஆனால் தற்போதைய டிரம்ப் நிர்வாகம், அமெரிக்காவில் அமெரிக்கர்களையே பணி அமர்த்த வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக உள்ளது. இதன் காரணமாக ‘எச்-1’ பி விசாவில் பணியாற்றுகிற இந்தியர்களின் துணைகளுக்கு ‘எச்-4’ விசா வழங்கி பணி ஆற்றுகிற வாய்ப்பினை பறிக்க முடிவு செய்து உள்ளது.

இது தொடர்பான ஒரு வழக்கு, அமெரிக்க பெடரல் கோர்ட்டில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பான முடிவு எடுக்கும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது என்று கோர்ட்டில் டிரம்ப் நிர்வாகம் ஒப்புக்கொண்டது. இறுதி முடிவு எடுத்த உடன், நிர்வாகம் மற்றும் பட்ஜெட் அலுவலகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் என கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. ஒபாமா கொண்டு வந்த இந்த திட்டம் பறிக்கப்பட்டு விட்டால், இது இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு அறிக்கையில், ‘எச்-4’ விசா பெற்று இருப்பவர்களில் 93 சதவீதம் பேர் இந்தியர்கள் என கூறப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top