அமெரிக்காவின் Ellicott நகரில் வரலாறு காணாத அளவில் கொட்டித் தீர்த்த மழையால் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 20 சென்டிமீற்றர் அளவிற்கு நேற்று மழை கொட்டியதால் Ellicott நகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
இதேபோல் இரண்டு ஆண்டுகளுக்குமுன் ஏற்பட்ட பெரு வெள்ளம் சாலைகளை சுத்தமாக அரித்ததால் மீண்டும் சாலைகளை உருவாக்க வேண்டியதாக இருந்தது.
பெரு வெள்ளம் காரணமாக கவர்னர். Larry Hogan அவசர நிலையை அறிவித்துள்ளதோடு Ellicott நகரின் மீட்புப்பணிகளில் உதவுமாறு மேரிலேண்ட் அவசரகால மேலாண்மை ஏஜன்சியை அறிவுறுத்தியுள்ளார்.
“ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் வெள்ளம் என்று இதைக் கூறுகிறார்கள், நமக்கோ இரண்டு ஆண்டுகளில் இரண்டு முறை இதேபோல் ஏற்பட்டு விட்டது என்று அவர் தெரிவித்தார்.
இதுவரை யாருக்கும் உயிச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் யாரும் காணாமல் போனதாக புகார்கள் எதுவும் வரவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.