News

அயர்லாந்தில் பலாத்காரம் செய்யப்பட்டு கல்லால் அடித்தே கொல்லப்பட்ட பாடசாலை மாணவி: கதறும் குடும்பம்.

அயர்லாந்தில் பாடசாலை மாணவியை இளைஞர்கள் கும்பல் ஒன்று கொடூரமாக பலாத்காரத்துக்கு உட்படுத்தி கல்லால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டப்ளின் நகரில் உள்ள லூகன் கிராமத்தில் குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த திங்களன்று இப்பகுதியில் குடியிருக்கும் Anastasia Kriegel என்ற 14 வயது பாடசாலை மாணவி மாயாமானார். தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததாகவும் அதன் பின்னர் அவர் குடியிருப்பில் இருந்து வெளியேறினார் எனவும், அதனையடுத்து அவர் குடியிருப்புக்கு திரும்பவில்லை எனவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் வியாழனன்று மதியம் பாழடைந்த கட்டிடம் ஒன்றில் இருந்து மாணவி அனஸ்தேசியாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து நடத்தப்பட்ட உடற்கூறு சோதனையில் அதிர்ச்சியளிக்கும் பல தகவல்கள் வெளியானது. மாணவி அனஸ்தேசியா ஒன்றுக்கும் மேற்பட்டவர்களால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். மட்டுமின்றி அவரது பிறப்புறுப்புகள் சிதைக்கப்பட்டுள்ளது. மேலும் தலையில் இரும்பு கம்பியால் அடித்து கொன்றுள்ளனர். மட்டுமின்றி கல்லால் அடித்துள்ளனர். உடம்பு முழுவதும் சித்திரவதை செய்யப்பட்ட காயங்கள் இருந்துள்ளன.

இந்த நிலையில் விசாரணையை முடுக்கி விட்ட அதிகாரிகள், பாலியல் நோக்கம் மட்டுமே சிறுமி கொலை காரணமாக இருக்க முடியும் என தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட மாணவியின் உடம்பில் இருந்து சேகரிக்கப்பட்ட டி.எம்.ஏ மாதிரிகளை பயன்படுத்தி குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மாணவி அனஸ்தேசியாவுக்கு நன்கு அறிமுகமானவர்களே இந்த கொலையை செய்திருக்க கூடும் எனவும், 13 வயது மதிக்கத்தக்க இரு பாடசாலை மாணவர்களை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்ததில், அவர்களுக்கு அனஸ்தேசியாவுடன் நட்பு உண்டு என்றாலும், கொலைக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிய வந்துள்ளது. சமூக வலைதளத்தில் பிரபலமான அனஸ்தேசியா திடீரென்று மாயமாகி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குடும்பத்தாரை கடுமையாக பாதித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top