அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களை நடத்தவுள்ள தமிழ்க்கூட்டமைப்பு!

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அஹிம்சை வழியிலானபோராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் இந்த தகவலை தமது இணையத்தில் வெளியிட்டுள்ளார். இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண புதிய அரசியலமைப்பை இலங்கைஅரசாங்கம் விரைவில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று கோரியே இந்தப் போராட்டம்நடத்தப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை கூட்டமைப்பு மேற்கொண்டு வருகிறது.
இதேவேளை இந்தப் போராட்டங்கள், மலேசியா, இந்தியா உட்பட்ட தமிழர் செறிந்து வாழும்நாடுகளிலும் முன்னெடுக்கப்படும் என்று டி.பி.எஸ். ஜெயராஜின் இணையத்தில்குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் நல்லாட்சி அரசாங்கத்துக்கு பல வழிகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புஆதரவாக செயற்பட்டு வருகிறது. இந்தநிலையில் அந்தக் கட்சி, அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்பட்டு வருகிறது என்றகாரணத்தை காட்டி கடந்த உள்ளுராட்சி தேர்தலில் அந்தக் கூட்டமைப்புக்கு பின்னடைவுஏற்பட்டதாகவும் ஊடகவியலாளரின் இணையத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.