News

அர்த்தம் தர அணிதிரள்வோம்! – மே தினச் செய்தியில் பிரதமர்.

புதிய நோக்குடன் மிகவும் விரிவான உரையாடல், கலந்துரையாடல் செயல் திறனுடைய தலையீடு என்பவற்றுடன் தொழிலாளர் தினத்திற்குப் புதிய அர்த்தமொன்றை வழங்க நாம் அனைவரும் அணிதிரள வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமரின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்துள்ள மே தினச் செய்தியிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. .

அதில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:-

“உலக வரலாற்றில் தொழிலாளர் போராட்டங்கள் உழைக்கும் மக்களுக்குப் பல உரிமைகளைப் பெற்றுக்கொடுத்துள்ளதுடன் தற்காலத்தில் தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக சம்பிரதாய போராட்டங்களைத் தாண்டிச் சென்ற புதிய முறைமைகளைக் கண்டறியும் சவால் நம் அனைவரின் முன்பாகவும் காணப்படுகின்றது.

நவீன தொடர்பாடல் தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் உழைக்கும் மக்கள் ஒன்று சேர்வதற்கு தமது உரிமைகள் தொடர்பாகப் பேசுவதற்கு – அது சார்ந்து நிற்பதற்கு மிகவும் செயல் திறனுடைய திறந்த உரையாடல் அரங்குகள் காணப்படுகின்றன.

முன்னேற்றமடைந்த உலகுடன் கைகோர்த்து உண்மையான மறுமலர்ச்சியை நோக்கி எமது நாட்டை உயர்த்துவதற்கு உழைக்கும் மக்களின் உயர்ந்தபட்ச பங்களிப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன்.

தமது உரிமைகளை வெற்றிகொள்வதுடன் நாட்டுக்காக தமது கடமைகள் மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு எந்தவிதமான குறைபாடும் இன்றி அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கு அனைத்து உழைக்கும் மக்களுக்கும் பலம் மற்றும் துணிச்சல் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன்” – என்றுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top