News

அவுஸ்திரேலியாவில் நாடு கடத்தப்படும் அபாயத்தில் இலங்கை தமிழ் குடும்பம்: நீதிமன்றின் தீர்மானம் வெளியானது .

அவுஸ்திரேலியாவின் மெல்பேனில் நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ள இலங்கையின் தமிழ்க் குடும்பத்தினர் தொடர்பில் தீர்மானம் எடுப்பதை மெல்போர்ன் நீதிமன்றம் இன்று பிற்போட்டுள்ளது. அத்துடன், தீர்மானம் மேற்கொள்ளும்வரை குறித்த இலங்கை குடும்பத்தினரை நாடு கடத்தவேண்டாம் என்றும் உள்;துறை அமைச்சை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

2012ஆம் ஆண்டு பிலோலேயில் குடியேறிய இலங்கையின் தம்பதியினரான நடேசலிங்கம் அவரது மனைவி பிரியா மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த குழந்தைகளான தாருணிகா, கோபிகா ஆகியோர் தற்காலிக வதிவிட விசாவில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் வீசா முடிவடைந்ததாக கூறி கடந்த மார்ச் 5ஆம் திகதி அவர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் பேர்த்துக்கு அழைத்துச்செல்லப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்தனர் எனினும் சட்ட நடவடிக்கை காரணமாக அது இறுதிநேரத்தில் நாடுகடத்தல் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு மெல்பேனிலேயே தடுத்து வைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் இன்று அவர்களின் நாடு கடத்தலுக்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டது இதன்போது குறித்த இலங்கை குடும்பத்தினரை நாடு கடத்தவேண்டாம் என்று கோரி நீதிமன்றத்திற்கு வெளியே கவனஈர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. குடிவரவு அமைச்சர் பீட்டர் டட்டன் தமது அதிகாரத்தை பயன்படுத்தி இலங்கை குடும்பத்தினரை மீண்டும் பிலோலேயிக்கு அனுப்பவேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top