ஆட்கடத்தல்காரர்களிடமிருந்து தப்புவதற்கு முயன்ற 15 பேர் படுகொலை

ஐரோப்பிய நாடுகளிற்கு ஆட்களை கடத்துபவர்களின் பிடியிலிருந்து தப்ப முயன்ற நூற்றிற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் மீது வடலிபியாவில் ஆள்கடத்தல்காராகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு இதனை தெரிவித்துள்ளதுடன் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டள்ளது.
ஐரோப்பியநாடுகளிற்கு தப்பிச்செல்வதற்கான முயற்சிகளின் போது லிபியாவை தளமாக கொண்டு செயற்படும் ஆள் கடத்தல்காரர்களிடம் சிக்கிய எரித்திரியா சோமாலியா எத்தியோப்பியா போன்ற நாடுகளை சேர்ந்தவர்களே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
மூன்று வருடங்களாக ஆள்கடத்தல்காரர்களினால் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த குடியேற்றவாசிகள் அவர்களின் பிடியிலிருந்து தப்பிச்செல்ல முயற்சித்தவேளையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.