News

ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் 3 தாக்குதல் சம்பவங்கள்:36 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஷஷ்தாராக் மற்றும் கந்தகார் பகுதிகளில் நடைபெற்ற தற்கொலை தாக்குதல் சம்பவங்களில் 11 மாணவர்கள் உட்பட 36 பேர் பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தகார் தெற்கு மாகாணத்தில் உள்ள அயல்நாட்டு ராணுவ பாதுகாப்பு மையத்தில் அயல்நாட்டு மற்றும் ஆப்கான் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த, வெடிகுண்டு வைக்கப்பட்ட கார் ஒன்று தற்கொலை தீவிரவாதியால் வெடிக்க செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் 11-க்கும் அதிகமான மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 16 பாதுகாப்பு படையினர் படுகாயமடைந்தனர். இத்தகவலை மாகாணத்தின் போலீஸ் செய்தி தொடர்பாளர் காசிம் ஆஃப்ஹா தெரிவித்தார்.

முன்னதாக ஆப்கானிஸ்தானின் நேட்டோ படையின் தலைமை அலுவலகம் மற்றும் அயல்நாடுகளின் தூதரகங்கள் உள்ளிட்ட முக்கிய கட்டிடங்கள் அமைந்துள்ள காபூலின் மத்திய பகுதியில் உள்ள ‌ஷஷ் தாராக் நகரில் இரட்டை மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்தின் தலைமை புகைப்பட கலைஞர் ஷா மராய் உள்பட 8 பத்திரிகையாளர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்பட 25 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தனர். அடுத்தடுத்து நடந்த இந்த 2 குண்டுவெடிப்பு சம்பவங்களில் 49 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதனிடையே ஷஷ்தாராக் மற்றும் கந்தகார் தாக்குதல் சம்பவங்களில் மொத்தம் 36 பேர் பலியாகியுள்ளனர். இத்தாக்குதல் சம்பவங்களால் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டு நாடு முழுவதும் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. மேலும் நாடு முழுவதும் உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளதாக அரசாங்கம் தரப்பில் கூறப்படுகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top