இரண்டாம் உலகப்போரில் உயிருடன் மனிதர்களை வெட்டி பரிசோதனை மறைக்கப்பட்ட அவலங்கள்?

இரண்டாம் உலகப்போரின்போது உயிருடன் மனிதர்களை வெட்டி பரிசோதனைகள் நடத்தியது முதல், பெண்களை வன்புணர்வு செய்து அவர்களுடைய கருவில் இருந்த குழந்தைகளுக்கு எவ்விதம் பால்வினை நோய்கள் பரவுகின்றன என்பதை அறியும் சோதனைகள் வரை நிகழ்த்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. 1936 ஆம் ஆண்டு வட கிழக்கு சீனாவில் ஜப்பான் ராணுவம் ”ஆராய்ச்சிக் காரணங்களுக்காக” என்று கூறி Unit 731 என்னும் ஒரு கட்டிடத்தில் சீனர்கள், ரஷ்யர்கள், பிரித்தானியர்கள் மற்றும் அமெரிக்க போர்க்கைதிகள் 3000 பேர் மீது பல்வேறு பரிசோதனைகள் நடத்திய மறைக்கப்பட்ட இரண்டாம் உலகப்போரின் அவலங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
உயிரி யுத்தத்தின் பரிசோதனையின் ஒரு பகுதியாக பெரிய எலிகள் மீது பிளேக் நோயைப் பரப்பி, பல்லாயிரக்கணக்கான சீனர்கள் வாழும் பகுதிகளில் அந்த நோய் தொற்றிய பூச்சிகளை பறக்க விட்டதன்மூலம் அவர்களுக்கு நோயைப் பரவச் செய்தனர். அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் திசுக்களையும் உறுப்புகளையும் ஆராய்வதற்காக மயக்க மருந்து கொடுக்கப்படாமலே மனிதர்கள்மீது அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுவதைக் காட்டுகின்றன.
மனிதர்கள் உடலில் நோய்க்கிருமிகள் செலுத்தப்பட்டு, அவர்கள் உயிருடன் இருக்கும்போதே அவர்களது உடல் உறுப்புகள் வெட்டி எடுக்கப்பட்டு, உடல் அழுகும்முன் நோய் உடலில் என்ன பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிய முற்பட்டனர். கைகால்கள் வெட்டி எடுக்கப்பட்டு, இரத்தம் எவ்வளவு வெளியேறுகிறது, எப்படி வெளியேறுகிறது என்பதை ஆராய்ந்து பின்னர் எடுத்த இடத்தில் உறுப்புகளை வைக்காமல் மாற்றி மாற்றி வைத்து தைத்த கொடுமையும் நடைபெற்றுள்ளது.
இதை விட கொடூரம், பால் வினை நோய்கள் கொண்ட ஆண்களைக்கொண்டு பெண்களை வன்புணர்வு கொள்ளச்செய்து அந்த கிருமி எப்படி பரவுகிறது என்பதை அறியும் ஆய்வுகள் நடத்தப்பட்டன. வன்புணர்வு செய்யப்பட்டதால் கர்ப்பமுற்ற பெண்கள் உடலில் பால் வினை நோய்க் கிருமிகளை செலுத்தி அவை எவ்விதம் கருவை பாதிக்கிறது என்பதை அறிவதற்கான கொடூர ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன.
பிரசவிக்க இருந்த ஒரு கர்ப்பிணியை தொண்டையிலிருந்து இடுப்பு வரை அறுத்துப் பார்த்த கோரங்களும் அரங்கேறியது. Unit 731இல் பிறந்த ஏராளமான குழந்தைகளுக்கு என்ன நேரிட்டது என்பது பதிவு செய்யப்படவே இல்லை. யுத்தம் முடிந்த நிலையில் Unit 731ஐ அழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை வெற்றி பெறவில்லை. Unit 731இன் பின்னணியில் இருந்தவரான Shirō Ishii தண்டிக்கப்படவேயில்லை.
அவர் உயிரி ஆயுதங்களைக் குறித்த தகவல்கள் அனைத்தையும் வெளியிட வேண்டும் என்னும் நிபந்தனையின்பேரில் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டார். மீதமுள்ளவர்கள் ரஷ்ய அரசாங்கத்தின் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு இரண்டாண்டு முதல் 25 ஆண்டுகள் வரை சைபீரிய லேபர் கேம்ப்களில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனாலும் ஜப்பானியர்கள் தவிர மற்ற நாட்டவர்களுக்கு இப்படி Unit 731 என்னும் ஒரு பரிசோதனை மையம் இருந்ததே தெரியாது என்பது அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உரிய விடயமாகவே உள்ளது.