India

இறுதிக்கட்டப் போரில் இறந்த ஈழ மக்களுக்கு இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அஞ்சலி

முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் இறந்த ஈழ தமிழ் மக்களுக்கு இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் நாம் தமிழர் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர். குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளதுடன், முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் 9வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மே 18ஆம் திகதி துக்கநாளாகவும், தமிழினப் படுகொலை நாளாகவும் இலங்கையில் உள்ள வடக்கு மாகாண சபை பிரகடனப்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், இராமேஸ்வரம் நகர் நாம் தமிழர் கட்சியினர் ஊர்வலமாக வந்து அக்னீ தீர்த்தக் கடலில் இறுதிக்கட்டப் பேரில் இறந்த மக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதன்போது, இறுதிக்கட்டப் போரில் இறந்த மக்களுக்கு வீர வணக்கம், இலங்கை மண்ணில் தனி ஈழம் அமைந்திட வேண்டும் உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பட்டுள்ளன.

மேலும், இந்த நிகழ்வில் மலர் அஞ்சலி நிகழ்ச்சியில் 50இற்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழினப் படுகொலைகள் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணில் வழக்கம் போலவே, இன்றைய தினம் மாபெரும் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு பொது மக்கள் மற்றும் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top