2009 என்றால் எமக்கு நினைவில் வருவது முள்ளிவாய்க்கால் என்னும் மனிதப் பேரவலம் தான். அங்கே நடந்த பல விடயங்களை. தப்பி வந்தவர் ஒருவர் மூலம் அறிந்து கொண்ட இயக்குனர் கணேஷன் அவர்கள் இதனை முழு நீள திரைப்படமாக எடுத்துள்ளார். இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். இந்தியாவில் சுமார் 111 திரை அரங்கில் இப் படம் 18.05.2018 அன்று வெளியாக உள்ளநிலையில் லண்டனில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காண்பிக்கப்பட உள்ளது.
இந்த திரைப்படத்தில் சனல் 4ல் கூட காண்பிக்காத பல உள்ளக தகவல்களோடு பல பகுதிகள் உள்ளதாக கூறப்படுகிறது. முள்ளிவாய்க்காலில் நடந்த கொடுமைகளை சித்தரிக்கும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதால் மக்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஈழத்தமிழ் இனப் படுகொலை நடந்ததை சித்தரித்து எடுக்கப்பட்ட இந்த 18.05.2009 என்னும் திரைப்படத்தை லண்டனில் காண்பிக்க , சிங்களவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகிறார்கள். இருப்பினும் பொது மக்களின் ஏகோபித்த ஆதரவோடு, இந்த திரைப்படம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது என செய்திகள் வெளிவந்துள்ளன.