News

இறுதிக்கட்ட போரில் பொது மக்கள் கொல்லப்பட்டனர் – ஏற்றுக்கொள்ளும் மஹிந்தவின் சகா.

இறுதிக்கட்ட போரின் போது விடுதலைப் புலிகளுடன் பொதுமக்களும் கொல்லப்பட்டனர் என மஹிந்த தலைமையிலான கூட்டுக் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் மற்றும் இராணுவத்தினரின் தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.

போரில் இறந்த பொதுமக்களை நினைவு கூர்வதை நாம் தடுக்க முடியாது. இனங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை விரைவில் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து வெளியிட்டார்.

அண்மையில் விடுதலைப் புலிகள் தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரட்ன வெளியிட்ட கருத்தினை ஆதரிக்கும் வகையில் கஜதீரவின் கருத்து அமைந்துள்ளது. விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் மட்டுமன்றி மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிராக மோதலிலும் பொது மக்கள் கொல்லப்பட்டதாக அண்மையில் அமைச்சர் ராஜித சேனரட்ன சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top