ஈரான் பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய 8 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை

ஈரான் பாராளுமன்றம் மற்றும் கமேனி நினைவிடத்தின் மீது தாக்குதல் நடத்திய 8 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பாராளுமன்றம் மற்றும் அந்நாட்டின் முக்கிய தலைவர் அயாத்துல்லா ருஹோல்லா கமேனி நினைவிடத்தின் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு நடத்திய தாக்குதல்களில் 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலின்போது பிடிபட்ட சில பயங்கரவாதிகள் மீது ஈரான் புரட்சிப்படை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி முஸா கஸான்பராபாடி 8 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.