News

உணர்வுபூர்வமாக நடத்தப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியின் இறுதிச் சடங்குகள் .

உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி பிரதீபனின் இறுதிக்கிரியைகள் இன்றைய தினம் மதியம் முல்லைத்தீவு முந்தையன்கட்டிலுள்ள அவரது வீட்டில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு, ஒட்டுச்சுட்டான் பகுதியைச் சேர்ந்த முன்னாள் போராளி நேற்றைய தினம் உயிரிழந்திருந்தார்.

புனர்வாழ்வு பெற்ற குறித்த முன்னாள் போராளி புற்றுநோயினால் தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் விக்ரர் கவச எதிர்ப்பு படையணியில் பணியாற்றிய குறித்த போராளி இறுதி யுத்தத்தின் பின்னர் புனர்வாழ்வு பெற்ற நிலையில் சுயதொழில் ஒன்றில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், உயிரிழந்த முன்னாள் போராளியின் இறுதி வணக்கக் கூட்டம் முத்தையன்கட்டு இளந்தளிர் கல்வி நிலையத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளதுடன், அவரது இறுதி வணக்க ஊர்வலமும் மிகவும் உணர்வெழச்சியுடன் நடத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த இறுதி கிரியை நிகழ்வின்போது பெருந்திரளான பொதுமக்கள், முன்னாள் போராளிகள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top