News

உணர்வெழுச்சியுடன் யாழ். பல்கலையில் தமிழினப் படுகொலை நினைவேந்தல்

தமிழினப் படுகொலையின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகத்தில் மாத்திரமின்றி புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளிலும் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், யாழ். பல்கலைக்கழகத்திலும் தற்போது நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

யாழ். பல்கலையின் துணைவேந்தர் விக்னேஸ்வரன் நினைவுச்சுடரை ஏற்றி வைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்துள்ளார்.

தொடா்ந்து பல்கலைக்கழக ஆசிரியா்கள், மாணவா்கள், பணியாளா்கள் உட்பட பலா் மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறு, நினைவேந்தல் கீதம் இசைக்க அஞ்சலி செய்தனர். தொடர்ந்து மலர் அஞ்சலி செய்ததோடு, யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் முள்ளிவாய்க்கால் பிரகடனம் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்நிலையில், 9ஆம் வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் மண்ணில் யாழ். பல்கலை மாணவர்களும் பொதுமக்களும் சூழ வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தற்போது இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top