உயரமான மின்சார கோபுரம் மீது ஏறி நின்ற இளைஞர்: நேர்ந்த சோகம் .

கனடாவில் உயரமான மின்சார கோபுரம் மீது இளைஞர் ஏறிய நிலையில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். டொரண்டோவை சேர்ந்த இளைஞர் ஞாயிற்றுகிழமை அங்குள்ள மின்சார கோபுரத்தின் மீது ஏறியுள்ளார்.
அப்போது கோபுரத்தின் மீது திடீரென மின்சார வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இளைஞர் அங்கிருந்து கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து இளைஞரின் சடலத்தை கைப்பற்றிவிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.