News

உயர் அதிகாரிகள் இருவரை உடன் பதவி நீக்குமாறு ஜனாதிபதி அதிரடி உத்தரவு .

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட உயர் அதிகாரிகள் இருவரை உடன் பதவி நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனாதிபதி ஊடக பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனாதிபதி ​செயலகத்தின் பிரதானி பேராசியர் ஐ.கே மஹனாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகிய இருவரையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த இரு அதிகாரிகளையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுதாகவும், அவர்களுக்கு எதிராக எவ்வித தடைகளும் இல்லாமல் சட்டம் சரியான முறையில் நிறைவேற்றப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆரம்பிக்கப்பட உள்ள திட்டம் ஒன்றுக்காக வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிடம் இரண்டு கோடி ரூபாவை லஞ்சமாக பெற்றுக்கொண்ட குறித்த இரு முக்கிய உயர் அதிகாரிகளையும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று கைது செய்துள்ளது.

இவர்கள் இருவரும் கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top