உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்.

உலகின் முதலாவது மிதக்கும் அணுமின் நிலையக் கப்பலை ரஷ்யா உருவாக்கியுள்ளது.
இக் கப்பல் 144 மீற்றர் நீளமும் 30 மீற்றர் அகலமும் கொண்டது. இந்த அணுமின் நிலையக் கப்பல் கடந்த மாதம் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்ட ஆரம்பித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை ரஷ்யாவின் முர்மான்ஸ் நகரில் இருந்து ஆர்டிக் வளைகுடா வழியாக பெவெக் நகரை நோக்கிய தன் பயணத்தை குறித்த மிதக்கும் அணுமின் நிலையக் கப்பல் ஆரம்பித்துள்ளது.
இந்தக் கப்பல் அடுத்த வருட இறுதியில் பெவெக் நகரைச் சென்றடையும் என்றும் இதனால் அங்குள்ள ஊர்களுக்கு மின்சாரம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இக் கப்பல் குறித்து விளக்கமளித்துள்ள ரஷ்ய அரசு, இந்தக் கப்பல் சர்வதேச விதிமுறைகளின் படி தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், சுனாமி போன்ற பெரிய அலைகளைத் தாங்கும் அளவுக்கு வலிமை மிக்கதாக இது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.