உலக மக்களை உலுக்கிய மரணம்! இதை செய்ய வேண்டாம்- பெற்றோரின் உருக்கமான வேண்டுகோள் .
பிரித்தானியாவில் மூளை சிதைவு நோயால் அவதிப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் பொதுமக்களுக்கு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர். பிரித்தானியாவில் மூளை சிதைவு நோயால் ஓராண்டு காலம் உயிருக்கு போராடி வந்த 23 மாத குழந்தை ஆல்ஃபி ஈவன்ஸ் சிகிச்சை பலனின்றி கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தது.
பிரித்தானிய மக்களை துயரத்தில் ஆழ்த்திய இந்த சம்பவத்தை அடுத்து நாடு முழுக்க பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் பல்வேறு வகையில் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் குழந்தை ஆல்ஃபியின் புகைப்படத்தில் அதன் தலைக்கு மீதே ஒளிவட்டமும், தேவதைகளுக்கான இறக்கையும் வரைந்து சமூக வலைதளத்தில் பலர் பதிவேற்றி வருகின்றனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள குழந்தை ஆப்ஃபியின் குடும்பத்தார், குறித்த புகைப்படங்களை பார்க்கும்போது அவரது தாயார் மிகவும் மனத்துயரத்துக்கு உள்ளாவதாகவும், அதனால் தயை கூர்ந்து அதுமாதிரியான விடயங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் கெஞ்சி கேட்டுக்கொண்டுள்ளனர். சமூக வலைதளங்களில் குழந்தையின் புகைப்படங்களுடன் அஞ்சலி செலுத்துவதை நிறுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ள அவர்கள், ஆனால் ஒளிவட்டம் மற்றும் தேவதைகளின் இறக்கை உள்ளிட்டவை வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
குழந்தை ஆல்ஃபியின் உயிரை காப்பாற்ற அவரது பெற்றோர் கடந்த ஓராண்டாக கடுமையாக போராடி வந்துள்ளனர். பிரித்தானிய உயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு ஆணையம், உச்ச நீதிமன்றம் மற்றும் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் உள்ளிட்டவகைகளை நாடியிருந்தனர். இருப்பினும் குழந்தை ஆல்ஃபிக்கு உரிய நீதியை இவை எதுவும் பெற்றுத்தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.