News

ஊழல், மோசடிகளை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய ஜனாதிபதி கடும் நடவடிக்கை .

அரச சேவை மட்டுமல்லாது ஏனைய அனைத்து துறைகளிலும் காணப்படும் ஊழல், மோசடிகளை தடுக்கவும் அதனை ஆரம்பத்திலேயே கிள்ளி எறியவும் அரசாங்கம் என்ற வகையில் எடுக்க வேண்டிய அனைத்து தீர்மானங்களும் தயக்கமின்றி எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்நறுவை றோயல் மத்திய கல்லூரியில் இன்று நடைபெற்ற சர்வதேச குடும்ப சுகாதார சேவை தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல்களில் ஈடுபடும் எவருக்கும் மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் அவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த போவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார் . மக்களின் கோபத்திற்கும், வெறுப்புக்கும் உள்ளாகும் வகையில் அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் வேலை செய்யக் கூடாது. சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப அரச சேவையில் முற்றாக இலஞ்சம் ஒழிக்கப்பட வேண்டும்.

நான் அமைச்சராக கடமையாற்றிய காலத்திலும் ஜனாதிபதியாக கடந்த மூன்று ஆண்டுகளிலும், ஊழல்,மோசடி, கொள்ளை, வீண்விரயம் மற்றும் அரச வளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க எந்த பேதமும் இன்றி எடுக்க வேண்டிய அனைத்து தீர்மானங்களையும் எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மத்திய வங்கி தொடர்பாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுத்துச் சென்றது போல், ஸ்ரீலங்கன் விமான சேவை தொடர்பான விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் மூலம் பல முக்கிய தகவல்களை நாடு அறிந்து கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top