News

என்னை சீண்டினால் பொறுமை காக்கமாட்டேன்! – மனோ கணேசனுக்கு சிவாஜிலிங்கம் எச்சரிக்கை

துணிவிருந்தால் என்னுடன் விவாதத்துக்கு வருவீர்களா?” என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், அமைச்சர் மனோ கணேசனுக்கு சவால் விடுத்துள்ளார். சிவாஜிலிங்கத்தை கோமாளி என மனோ கணேசன் தெரிவித்த கருத்து தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“உங்களை பற்றி பேசுவது அரசியல் நாகரிகம் இல்லை. நீங்கள் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களில் ஒருவராக உள்ளீர்கள். உங்களை விமர்சித்தால், அது மலையக தமிழர்களை புண்படுத்தும் என்பதால் பேசாது விடுகிறேன். தொடர்ந்து என்னை நீங்கள் சீண்டினால் நான் தொடர்ந்து பொறுமை காக்க மாட்டேன்.

மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது கூட இனப்படுகொலையின் அம்சம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்து விட்டீர்கள், ஏணிகளாக இருந்து உங்களை ஏற்றிவிட்ட பிரபாகணேசன், குமரகுருபரன், வேலணை வேணியன் எங்கே ? என் கருத்துக்கு எதிர்க்கருத்து கூறுவது என்றால், அரசியல் நாகரீகத்தை பேணி பேசுங்கள். இல்லை என்றால் நானும், உங்கள் கடந்த காலத்தை தூசு தட்டுவேன்”என தெரிவித்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top