ஏமாற்றிய பயண ஏற்பாட்டாளர்;7 மில்லியன் டொலர்கள் நஷ்ட ஈடு கேட்கும் பெண்!

ஒரு வருடத்திற்கு முன் கியூபாவிற்கு சுற்றுலா சென்ற ஒரு குழுவிலுள்ள மாணவர்களை, டொரண்டோ பயண ஏற்பாட்டாளர் நிறுவனம் ஒன்றின் சார்பாக, 14 நாட்கள் மேற்பார்வையிடும் வேலையைச் செய்தார் D’Andra Montaque(23). அந்த நிறுவனம் Montaque இடம் வேலை வாங்கிக் கொண்டு அதற்கான ஊதியத்தை வழங்காமல் அவரை ஒரு தன்னார்வலராக கருதியதாக கூறி 150 டொலர்கள் மட்டுமே வழங்கியது.
இதனால் S-Trip என்னும் அந்த நிறுவனத்தின் மீது தற்போது 7 மில்லியன் டொலர்கள் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார் Montaque. அது ஒரு நல்ல வேலை, அருமையான ஒரு அனுபவம், ஆனால் நான் பயன்படுத்தப்பட்டதாக உணர்கிறேன் என்கிறார் Montaque.
வழக்கை கையிலெடுத்துக் கொண்டுள்ள வழக்கறிஞர்கள், S-Trip நிறுவனத்தின் மேற்பார்வையிடும் வேலையைச் செய்பவர்கள் முறைப்படி பணியாளர்கள் என வகைப்படுத்தப்படவில்லை என்றும் வேலை செய்த நேரத்திற்கான குறைந்தபட்ச ஊதியம் கூட அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இவை ஒண்டாரியோ தொழிலாளர் சட்டங்களை மீறுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள நிறுவனம் மேல் முறையீடு செய்யப்போவதாகக் கூறியுள்ளது.