ஏவுகணை தாக்குதல் நடத்தியது அமெரிக்க கூட்டுப்படையா? ஆதாரங்களை வெளியிட்ட சிரியா .

சிரியாவில் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு நடந்த ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்தது பிரித்தானியா மற்றும் அமெரிக்கா என சிரியா ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. சிரியாவில் நேற்றிரவு உள்ளுர் நேரப்படி 10.30 மணியளவில் திடீரென்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இது ஜோர்டானில் உள்ள பிரித்தானியா மற்றும் அமெரிக்க ராணுவ தளத்தில் இருந்து நடத்தப்பட்டதாக சிரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொத்தம் 9 ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளதாகவும், இதில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டதாகவும் சிரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குறித்த தாக்குதலானது எதிரணிகளின் கோபத்தை தூண்டும் வகையில் உள்ளது எனவும் சிரியா அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் குறித்த தாக்குதலுக்கும் பிரித்தானியா கூட்டுப்படைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஜோர்டான் மறுத்துள்ளது.
முதலில் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் நாடுதான் காரணம் என குற்றஞ்சாட்டப்பட்டது. பின்னரே ஆசாத் ஆதரவு ஊடகம் ஒன்று ஜோர்டான் தொடர்பு படுத்தி குறித்த தகவலைவெளியிட்டது. நேற்று இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர ஈரான் மற்றும் ஈராக்கியர்கள் என கூறப்படுகிறது. சிரியாவின் முக்கிய ராணுவ தளத்தை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஆனால் பெருமளவு பாதிப்பு இல்லை எனவும் அரசு தரப்பு தெரிவித்துள்ளது