News

ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால்- இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்!!

ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கும் மேற்பட்ட இலங்கை இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மே 18 தமிழின அழிப்பு நாளான இன்று ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்ற பெயரில் இலங்கைத் துதரக இணையத்தளங்கள், அரசநிர்வாக இணையங்கள் மற்றும் அரச ஆதரவான செய்தி ஊடக இணையங்கள் உட்பட 300 -க்கும் மேற்பட்ட இணையத்தளங்களை ஊடுருவி அந்த தளங்களில் முள்ளிவாய்க்கால் இன்படுகொலைப்படங்களை பதிவேற்றியும் அதை தாம் மறக்க மாட்டோம் எனவும் செய்தி பதிவேற்றியுள்ளனர்.

இது மட்டுமல்லாமல் யாழில் உள்ள இந்தியத் துணைத்தூதராக இணையத்திற்குள்ளும் புகுந்திருக்கிறது “சைபர் தாக்குதலணி”. 2017 ஆம் ஆண்டு மே மாதம்18 ஆம் திகதியும் 200 க்கும் மேற்பட்ட இணையத்தளங்களை இதே பேரில் முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Latest News

To Top