கனடாவில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட பெண்: இளம் பெண் கைது .

கனடாவில் இரண்டு பெண்கள் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். Flin Flon நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. 23 மற்றும் 22 வயதுகளில் உள்ள இரு பெண்களை 23 வயதான இளம் பெண் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார்.
இதையடுத்து கத்திகுத்து பட்ட இரு பெண்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 23 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மற்றொரு பெண்ணுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் உடல்நிலை நலமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இருவரையும் கத்தியால் குத்திய பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த பெண் வரும் 22-ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.