Canada

கனடாவில் துப்பாக்கிச்சூடு தொடர்பில் பகீர் வீடியோ வெளியிட்ட பொலிஸ் ..

கனடாவில் கடந்த ஞாயிறு அன்று நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பில் தலைமறைவான குற்றவாளிகள் குறித்த கமரா காட்சிகளை பொலிசார் வெளியிட்டுள்ளனர். கனடாவில் பிரபல பாடகர் டிரேக்குடன் இணைந்து உணவு விடுதி ஒன்றை துவங்கியுள்ளார் 28 வயதான Jaiden Jackson. இவர் கடந்த ஞாயிறு அன்று மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் பொலிசார், குற்றவாளிகள் தொடர்பில் பகீர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் Jaiden Jackson மற்றும் அவருடன் பெண் ஒருவர் என இருவரும் வெலிங்டன் தெருவின் வடக்கு பகுதியில் நடந்து சென்றுள்ளனர். அப்போது கருப்பு நிற Honda Civic வாகனம் அவர்களை இடைமறித்துள்ளது. அந்த வாகனத்தில் வந்த இருவர் இவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத்துவங்கியுள்ளனர்.

இந்த நிலையில் ஜாக்ஸன் அந்த மர்ம நபர்களிடம் இருந்து தப்பிக்க ஓட்டமெடுத்துள்ளார். ஆனாலும் துரத்திச் சென்ற கும்பல் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து மாயமாகியுள்ளது. தகவல் அறிந்து அதிகாரிகள் சம்பவயிடத்திற்கு செல்கையில் ஜாக்ஸன் குற்றுயிரான நிலையில் இருந்துள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் அவரை அனுமதித்தாலும், காயங்கள் காரணமாக ஜாக்ஸன் மரணமடைந்ததாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையிலேயே பொலிசார் குறித்த வீடியோ காட்சிகளை தற்போது வெளியிட்டு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். குறித்த நபர்கள் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top