உலகெங்கும் இருந்து கனேடிய தலைநகர் ஒட்டாவாவில் குழுமியுள்ள அறிவாளர்களும், மக்களும் பங்கெடுக்கும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வை மையமாகக் கொண்டு நடைபெறும் மாபெரும் மாநாடு சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு இனிதே ஆரம்பமாகியது.
இந்த மாநாட்டில் பங்கேற்க டொரோண்டோ, மொன்றியல், வினிப்பெக் மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்து மக்கள் வந்துசேர்ந்த வண்ணமுள்ளனர். அனைவருக்கும் உணவு மற்றும் தங்குமிட வசதிகளும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
மேலும் வர விரும்பும் மக்களுக்கும் வசதிகள் செய்ய ஒழுங்கமைப்பாளர்கள் தயாராக உள்ளார்கள். உங்களுக்கான, உணவு மற்றும் போக்குவரத்து வசதிகளுக்கு உடன் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம்: (647) 243 9396 Press # 2
கனடாவில் நடைபெறவுள்ள தமிழர் மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த 30 இற்கும் மேற்பட்ட அறிஞர்களும் ஒட்டாவா விமான நிலையத்துக்கு வந்து சேர தொடங்கியுள்ளனர். வந்து சேர்ந்த அனைவருக்கும் கனேடிய தமிழ் அமைப்புகள் சார்பில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழை தாய் மொழியாக கொண்ட அனைவரும் இந்த மாநாட்டில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்பதே வருகை தந்துள்ள பேராசிரியர்கள், அறிவாளர்கள் மற்றும் ஒழுங்கமைப்பாளர்களின் வேண்டுகோள்.
இதில் இறுதி நிகழ்வாக தமிழர் அரசியல் மற்றும் அவர்களின் தனிநாடொன்றிக்கான தேவை போன்ற ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு, பாராளுமன்றில் ஒருங்கமைக்கப்பட்டுள்ள நிகழ்வில் கனடாவின் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் உத்தியோகபூர்வமாக விளக்கமளிக்கப்படும்.
எதிர்வரும் காலங்களில் கனடா மற்றும் நேச நாடுகள் தமிழர்கள் குறித்து எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும், இந்த மாநாட்டின் ஆய்வறிக்கைகள் உதவும்.