Canada

கனடாவில் வெவ்வேறு இடங்களில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி, மூவர் காயம் …

கனடாவின் டொரோண்டோவில் கடந்த ஞாயிறன்று நான்கு வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் பலியான
நிலையில் மூவர் காயமடைந்துள்ளனர்.45 நிமிட இடைவெளியில் டொரோண்டோ நகரில் குறிப்பிட்ட இடங்களில் துப்பாக்கி சூடு நடைபெற்றது.

முதல் துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி பொலிசாருக்கு தகவல் வந்த போது உள்ளூர் நேரப்படி இரவு 10.45 மணி இருக்கலாம் என்றும் Dundas St மற்றும்
Spadina Ave-வில் உள்ள கேன்சிங்ஸ்டன் மார்க்கெட் பகுதியில் மேற்குறிப்பிட்ட சம்பவம் நடந்தாக தகவல் வந்தது எனவும் சம்பவ இடத்திற்கு வந்து
பார்த்த போது ஒரு மனிதர் குண்டடி பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரை காப்பாற்றுவதற்காக அவசரநிலை பணியாளர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சம்பவம் நடந்த இடத்தில் துப்பாக்கி குண்டு படிந்த
தடயங்கள் இருந்தன என்று பொலிசார் கூறினர்.

அதன் பின் 15 நிமிடங்கள் கழித்து Sherbourne மற்றும் Earl Sts அருகில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் டவுனில் இதே போல குண்டு வெடிப்பு சம்பவம்
நடைபெற்றதாக தகவல் வரவே காவல்துறையினர் அங்கு சென்றனர்.

அங்கும் இரண்டு நபர்கள் காயங்களுடன் இருக்கவே அவர்களை மருத்துவமனை அனுப்பி வைத்தது காவல்துறை. அந்த இடத்திலும் துப்பாக்கி குண்டு
வெடித்த தடயங்கள் இருந்தன என்று பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அரை மணி நேரத்திற்குப் பிறகு Chester Le Blvd அருகே Scarboroughவில் துப்பாக்கி சூடு நடைபெறுவதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. நடந்த
சம்பவம் விக்டோரியா பார்க் அவென்யூ விற்கு வெகு அருகில் நடந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு காவல் துறை வந்து பார்க்கும் பொழுது அங்கு யாரும் இல்லை எனவும் ஆனால் துப்பாக்கி குண்டு வெடித்தற்கான தடயங்கள் இருந்தன
என்றும் காவல்துறை கூறியுள்ளது.

அதன்பின்பு ஸ்கார்பாரோ வாஸஃபர்ன் வே அருகில் நடைபெற்ற சம்பவம் பற்றி நள்ளிரவு 12:15 மணிக்கு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை துப்பாக்கி சூட்டில் ஒரு ஆண் இறந்திருப்பதை உறுதி செய்துள்ளனர். மேலும் விசாரணை தொடர்கிறது.

இருப்பினும் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் சந்தேகப்படும் நபர்கள் பற்றிய எந்தவொரு செய்தியும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top