Canada

கனடாவில் 20 நிமிடத்துக்கு ஒரு பெண் மரணம்! அதிர்ச்சி தகவல் .

கனடாவில் பெண்கள் அதிகளவு இறப்பதற்கு காரணமாக முதலிடத்தில் இதய நோய் இருப்பது தெரியவந்துள்ளது. TimeToSeeRed என்னும் தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஹார்ட் & ஸ்ட்ரோக் பவுண்டேசன் என்னும் தொண்டு நிறுவனம் இது குறித்த புள்ளிவிபரத்தை வெளியிட்டுள்ளது. இதில் நாட்டில் 20 நிமிடத்துக்கு ஒரு பெண் இதய நோயால் இறக்கிறார் எனவும் ஆண்களை விட பெண்களே மாரடைப்பு ஏற்பட்டு மரணிக்கிறார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதோடு ஆண்டுக்கு 25000 பெண்கள் இதய நோயால் உயிரிழப்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து பேசிய ஹார்ட் & ஸ்ட்ரோக் பவுண்டேசன் தலைவர் யுவிஸ் சவீ, இதய நோய் விடயத்தில் பெண்கள் விழிப்புணர்வு இல்லாமலே இருக்கிறார்கள். புகைப்பிடிப்பவர்கள், புகைப்பிடிக்காதவர்களை விட மூன்று மடங்கு இதய நோயால் உயிரிழக்கிறார்கள். அதே போல பெண்கள் அதிகளவு மது அருந்துவதும் இதய நோய் வருவதற்கு காரணமாக உள்ளது. பெண்கள் ஒரு நாளைக்கு இரண்டு டம்ளருக்கு மேல் நிச்சயம் குடிக்கக்கூடாது. ஒரு நாளைக்கு 10 நிமிடம் வீதம் மூன்று தடவை நடைபயிற்சி செய்வதும், சரியான உடற்பயிற்சி செய்வதும் இதய நோயிலிருந்து தப்பிக்க உதவும் என கூறியுள்ளார்.

உணவுதான் உடலை இயங்கச் செய்கிறது. அதேசமயம் உணவை சீராக எடுத்துகொள்ள வில்லை என்றால் சிக்கலையும் தருகிறது. 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், அதிக அளவில் இறைச்சி உணவை உட்கொள்வதால் இதய நோய் ஏற்படுகிறது. 50 வயதுக்கு மேற்பட்டப் பெண்களுக்கு அதிக அளவில் இதய நோய் வர முக்கியக் காரணம் மாதவிடாய் நின்றுவிடுவதேபெண்களுக்கு மாதவிடாயின்போது சுரக்கும் ஹார்மோன்கள் இதய நோய் வராமல் தடுக்கிறது. மாதவிடாய் நின்றுவிட்டால் பெண்கள் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும்.

பொதுவாக பெண்களுக்கு 50 வயதுக்குள்ளே மாதவிடாய் நின்றுபோய்விடுகிறது. அப்போது பெண்கள் உணவு உட்கொள்வதில் கவனமின்றி இருக்ககூடாது. முக்கியமாக இறைச்சி உணவைத் தவிர்த்து அதிகம் காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

Latest News

To Top